ஏ.ஐ.பி.ஏ. (AIBA) சார்பில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில், 52 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் அமித் பங்கல், ஒலிம்பிக் சாம்பியன் உஸ்பெகிஸ்தானின் சோய்ரோவுடன் மோதினார். இதில், அமித் பங்கல் 0-5 என்ற கணக்கில் வெற்றியை இழந்ததால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதன்மூலம், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். அதேபோல அந்தத் தொடரில் 63 கிலோ பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் மனிஷ் கவுசிக் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், நேற்று பதக்கத்துடன் தாயகம் திரும்பிய அமித் பங்கலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமித் பங்கல், மனிஷ் கவுசிக் ஆகியோரை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கிரண் ரிஜிஜூ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
हमारे अनमोल "दो" रतन!
— Kiren Rijiju (@KirenRijiju) September 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
India's best ever performance in World Men's Boxing Championship! I'm proud to honour @Boxerpanghal the first Indian to win Silver medal and Manish Kaushik who won bronze medal🇮🇳 pic.twitter.com/gb7cfGrOdt
">हमारे अनमोल "दो" रतन!
— Kiren Rijiju (@KirenRijiju) September 23, 2019
India's best ever performance in World Men's Boxing Championship! I'm proud to honour @Boxerpanghal the first Indian to win Silver medal and Manish Kaushik who won bronze medal🇮🇳 pic.twitter.com/gb7cfGrOdtहमारे अनमोल "दो" रतन!
— Kiren Rijiju (@KirenRijiju) September 23, 2019
India's best ever performance in World Men's Boxing Championship! I'm proud to honour @Boxerpanghal the first Indian to win Silver medal and Manish Kaushik who won bronze medal🇮🇳 pic.twitter.com/gb7cfGrOdt
இதுமட்டுமில்லாமல், உலக அளவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமித் பங்கலுக்கு அவர் 14 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி கெளரவப்படுத்தினார். அதேபோல, வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷ் கவுசிக்கிற்கு எட்டு லட்சம் ரூபாய் காசோலை வழங்கினார்.