ETV Bharat / sports

ஊக்க மருந்து சர்ச்சை: தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ள ரஷ்யா! - Russian athletes banned for doping

நான்கு ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (RUSADA) அறிவித்துள்ளது.

RUSADA, ரஷ்ய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு
ரஷ்ய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு
author img

By

Published : Dec 20, 2019, 9:13 PM IST

ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு குறித்து உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பான வாடா (WADA) விசாரணை மேற்கொண்டது.

அச்சமயத்தில் ஊக்க மருந்து பயன்படுத்திய ரஷ்ய வீரர்களின் பரிசோதனை மாதிரிகளை மாற்றிவைத்ததாகவும், ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்கள் குறித்த தகவல்களை ரஷ்யா அழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் இந்தக் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு, ரஷ்யாவுக்கு அனைத்துவிதமான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகளுக்குத் தடைவிதித்து கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி உத்தரவிட்டது. இதனால், ரஷ்யாவின் 2020 டோக்கியோ ஒலிம்பிக், 2022 உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது.

Russia
உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு

இதனிடையே உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு தங்களுக்கு விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக ரஷ்யாவின் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இந்தத் தடையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இது தொடர்பாக ரஷ்ய அதிபர் சார்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உலக ஊக்க மருந்து அமைப்பிற்கு கடிதம் எழுதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அணி வீரர்களுடன் ஜாலியாக இருக்கும் கோலி

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/other-sports/russia-set-to-appeal-against-doping-ban/na20191220085915699

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.