ETV Bharat / sports

#PKL: வெற்றியை தவறவிட்ட தமிழ் தலைவாஸ்!

author img

By

Published : Aug 19, 2019, 10:47 AM IST

புரோ கபடி தொடரின் லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

pro kabbadi

புரோ கபடி லீக் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பல்தான் அணியுடன் மோதியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீர்களும் ரைடிங், டிஃபெண்டிங்கில் சம பலத்துடன் மோதினர்.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 12-15 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பல்தான் அணியை விட பின் தங்கியிருந்தது. அதன்பின் ஆட்டத்தின் இராண்டாவது பாதியிலும் இரு அணிகளும் புள்ளிகளை விட்டுக்கொடுக்காமல் சமநிலையை தொடர்ந்தனர்.

இறுதியில் இரு அணிகளும் 31-31 புள்ளிகள் பெற்றதால், ஆட்டம் சமனில் முடிவடைந்தது. சொந்த மண்ணில் வெற்றிபெறும் வாய்ப்பை நூலிழையில் தமிழ் தலைவாஸ் அணி இழந்தது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி எட்டு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்வி, இரண்டு சமன் என 23 புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், புனேரி பல்தான் அணி எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றி, ஐந்து தோல்வி, ஒரு டிரா என 17 புள்ளிகளை பெற்று பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது.

Intro:Body:

Tamil Thalaivas vs Puneri Paltans

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.