புவனேஷ்வர்: ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பிஜேபி கல்லூரியில் பயின்று வந்த 19 வயது மாணவி நேற்று முன்தினம் (ஜூலை 2) தற்கொலை செய்து கொண்டார். அம்மாணவியின் அறையில் இருந்து எடுக்கப்பட்ட கடிதத்தில், மூன்று சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்ததுதான் தன்னை தற்கொலைக்கு துண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த பேஸ்புக் பதிவு ஒன்றில் தடகள வீராங்கனையும், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்றவருமான டூட்டி சந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "நாங்களும் இதே விளையாட்டு விடுதியில் தங்கியிருந்த போது ரேகிங்கால் பாதிக்குப்பட்டுள்ளோம். அங்கு அவர்களுக்கு உடல் மசாஜ் செய்வது, அவர்களின் துணியை துவைப்பது போன்ற ரேகிங் செயலில் தங்களை ஈடுபடுத்தினர். மூன்று ஆண்டுகள் அதை பொறுத்துக்கொண்டேன். நாங்கள் ஜூனியர்களாக என்பதால் சீனியர்கள் எங்களை சித்ரவதை செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்தனர். இதுபோன்ற வலியை யாராலும் வெளியே சொல்ல இயலாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வேகமான பெண்மணி என்றைழக்கப்படும் டூட்டி சந்த் 100 மீட்டர் தூரத்தை 11.17 வினாடிகளில் கடந்து தேசிய சாதனையை வைத்துள்ளார். இவர் 2006 முதல் 2008ஆம் ஆண்டு வரை இதே புவனேஷ்வர் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விம்பிள்டன் 2022: 13ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்