இந்த ஆண்டிற்கான உலகக்கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள வேல்ஸ் அணி ஜோர்ஜியா அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் தங்களது வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். அப்போது போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதினால் வேல்ஸ் அணி வீரர்கள் ஆட்டவிதி மீறல்களில் ஈடுபட்டு எதிரணியை சீண்டினர்.
ஆட்ட விதிமீறல்:
- வேல்ஸ் அணி வீரர்கள் ஆட்டத்தின் இரண்டாவது பாதியின்போது அணி வீரர்களின் வரிசையை மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அந்த அணியின் ஜோனாதன் டேவிஸ் எதிரணி வீரர்களை சீண்டும் விதத்தில் ஆட்டத்தின்போது ஜோர்ஜியா அணி வீரர்களை வம்புக்கு இழுத்ததினால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
HIGHLIGHTS: @Welshrugbyunion v @georgianrugby at Rugby World Cup 2019 #RWC2019 #WALvGEO pic.twitter.com/VgnlQ7ZsCo
— Rugby World Cup (@rugbyworldcup) September 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">HIGHLIGHTS: @Welshrugbyunion v @georgianrugby at Rugby World Cup 2019 #RWC2019 #WALvGEO pic.twitter.com/VgnlQ7ZsCo
— Rugby World Cup (@rugbyworldcup) September 23, 2019HIGHLIGHTS: @Welshrugbyunion v @georgianrugby at Rugby World Cup 2019 #RWC2019 #WALvGEO pic.twitter.com/VgnlQ7ZsCo
— Rugby World Cup (@rugbyworldcup) September 23, 2019
-
- அதன்பின் ஜஸ்டின் திப்புரிக், ஜோஷ் ஆடம்ஸ் ஆகியோர் எல்லைக்கோட்டைத் தாண்டி சென்று விளையாடியதாக போட்டியின் நடுவர் எச்சரித்துள்ளார்.
சர்ச்சைக்கு பின் கிடைத்த வெற்றி:
அதன்பின் வேல்ஸ் அணி ஆட்டநேர முடிவில் 43-14 என்ற புள்ளிக்கணக்கில் ஜோர்ஜியா அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் வேல்ஸ் அணி குரூப் டி பிரிவில் ஐந்து புள்ளிகளைப் பெற்று முதலிடம் வகிக்கிறது.
வேல்ஸ் அணி சர்ச்சை:
- கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அணியின் துணைப் பயிற்சியாளர் ராப் ஹவ்லி அணியின் ஒப்பந்த விதிகளை மீறியதாக வேல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
- தற்போது அந்த சர்ச்சை ஓய்வதற்குள் வேல்ஸ் அணி வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் சர்ச்சையில் சிக்கியுள்ளது ரக்பி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய பயிற்சியாளர்...! - வீட்டுக்கு அனுப்பிய அணி நிர்வாகம்!