ETV Bharat / sports

#AIBAWorldBoxingChampionship: உலக அளவில் வெள்ளி வென்ற முதல் இந்தியர்! - உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பங்கல் படைத்துள்ளார்.

Amit Phangal
author img

By

Published : Sep 21, 2019, 9:00 PM IST

ஏ.ஐ.பி.ஏ (AIBA) சார்பில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், 52 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், இந்தத் தொடரில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

Amit Phangal
ஒலிம்பிக் சாம்பியனுடன் பலப்பரீட்சை செய்த அமித் பங்கல்

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர், ஒலிம்பிக் சாம்பியனும் உஸ்பேகிஸ்தான் வீரருமான ஸோய்ரோவை எதிர்கொண்டார். இதுவரை எந்த இந்திய வீரரும் இந்தத் தொடரில் தங்கம் வென்றதில்லை என்பதால், அமித் பங்கல் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.

Amit Phangal
தோல்வி அடைந்த சோகத்தில் அமித் பங்கல்

இதையடுத்து, நடைபெற்ற முதலிரண்டு சுற்றுக்களில் ஓரளவு தாக்குப்பிடித்த அமித் பங்கல் தாக்குதலான ஆட்டத்தில் ஈடுபட்ட போதிலும் அவரால் புள்ளிகளைப் பெற முடியமால் போனது. அதேசமயம், கடைசி சுற்றில் ஸோய்ரோ ஆக்ரோஷத்துடன் விளையாடினார்.

இறுதியில், அமித் பங்கல் 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால், வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. இருப்பினும், உலக குத்துச்சண்டை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். உலக அளவில் இத்தகைய சாதனையை படைத்த இவருக்கு தற்போது சமூகவலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்துவருகிறது.

முன்னதாக, நடைபெற்ற இந்தத் தொடரில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 63 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Ronaldo Surfing a girl in for the Reason of  begining stage help

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.