ETV Bharat / sports

' அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி போட்டிகளை நடத்தலாம்' - கிரண் ரிஜிஜு - பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகளை தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு நடத்தலாம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

nsfs-can-organise-sporting-events-sop-needs-to-be-maintained-rijiju

author img

By

Published : May 20, 2020, 1:03 PM IST

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அனைத்து வகை விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. மே 17ஆம் தேதியோடு மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தி, அதில் பல தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்தது. அதில் பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம் எனக் கூறியது.

இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ''மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளைப் பின்பற்றி தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உடற்பயிற்சி நிலையம், ஸ்விம்மிங் பூல் ஆகியவை மூடப்பட்டே இருக்கும். ஏனென்றால் அதனை அனைத்து வீரர்களும் பயன்படுத்தும்போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஹாக்கி, கால்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் சமூக விலகலைக் கடைப்பிடிப்பது கடினமான விஷயம். அதனால் அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பயிற்சிகளில் ஈடுபடுத்த முடியாது. சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கு நீண்ட நாள்களுக்குப் பயிற்சி கொடுக்காமல் இருப்பது பின்விளைவுகளை ஏற்படுத்தும். நீண்ட நாள்கள் வீட்டிலிருக்கும்போது வீரர்களின் உடல்நிலையிலும், மன நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்படும். அதனால்தான் விளையாட்டு தொடர்பான விஷயங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் உடல்நிலைதான் நமக்கு முக்கியம். அதனால் அனைத்துப் பயிற்சி மைதானங்களிலும் அரசு அறிவித்த விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க: ஆட்டநாயகன் வார்னர் - 'கிரிக்கெட்டில் மட்டுமல்ல டிக்டாக்கிலும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.