டெல்லி: அமெரிக்காவின் யூஜீனில் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியின்போது, தனக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே தங்கம் வெல்ல முடியவில்லை என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது.
இதில் அவரது அடிவயிற்றுக்கும் மேல் தொடைக்கும் இடைப்பட்ட பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் ஒருமாத காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நீரஜ் சோப்ராவுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனடிப்படையில் நீரஜ் ஓய்வில் இருந்துவருகிறார். இதன்காரணமாக அவர் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்வதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகளிலிருந்து நீரஜ் சோப்ரா விலகியுள்ளார்.
இதையும் படிங்க: உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?