ETV Bharat / sports

ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

பாட்டியாலா: இந்தியன் கிராண்ட்பிரிக்ஸ் ஈட்டி எறிதல் தடகளப் போட்டியில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனையைப் படைத்து, தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

Neeraj Chopra breaks his own national record in javelin

author img

By

Published : Mar 6, 2021, 10:40 AM IST

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 3ஆவது இந்தியன் கிராண்ட்பிரிக்ஸ் தடகளப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

இப்போட்டியில் நீரஜ் சோப்ரா தனது ஐந்தாவது முயற்சியில் 88.07 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, புதிய தேசிய சாதனையைப் படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார்.

முன்னதாக 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில், நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததே தேசிய சாதனையாக இருந்தது. இந்நிலையில் தற்போது தனது சாதனையையே முறியடித்து புதிய தேசிய சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.

  • In his first competitive event in more than a year, #TOPSAthlete javelin thrower @neeraj_chopra1 records a throw of 88.07m at the Indian Grand Prix-3. With this he also sets a national record surpassing his own record of 88.06m.
    * This is subject to ratification. pic.twitter.com/O8TMXeqBTL

    — SAIMedia (@Media_SAI) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், கடந்தாண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த சர்வதேச போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்ற நீரஜ் சோப்ரா, கரோனா ஊரடங்கிற்குப் பிறகு பங்கேற்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடாதது ஏன்? விளக்கும் இசிபி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.