தேசியளவிலான டேபிள் டென்னிஸ் தொடரின் 81ஆவது சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று நடந்தன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நான்காம் நிலை வீரரான மனவ் தக்காரை எதிர்த்து ஆறாம் நிலை வீரரான ஹர்மீத் தேசாய் ஆடினார். அதில் 4-3 என்ற கணக்கில் ஹர்மீத் தேசாய் வெற்றிபெற்று முதல்முறையாக தேசிய சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் சுதிர்தா முகர்ஜியை எதிர்த்து கிருத்விகா சிங் ராய் ஆடினார். அதில் 4-0 என வெற்றிபெற்ற சுதிர்தா, தேசியளவில் இரண்டாவது முறையாக மகளிர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார். இந்தத் தங்கப்பதக்கதோடு சேர்த்து ஏற்கனவே மகளிர் இரட்டையர் பிரிவில் ஒரு தங்கம், அணியாகப் பங்கேற்ற போட்டிகளில் ஒரு தங்கம், கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளி என மொத்தமாக நான்கு பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.
இந்த வெற்றி குறித்து ஹர்மீத் பேசுகையில், ''ஜெர்மனியில் உள்ள ஆக்ச்டன் செண்டரில் பயிற்சிபெற்றுவருகிறேன். தலைசிறந்த டேபிள் டென்னிஸ் வீரர்களுடன் எனது பயிற்சி அமைந்ததால், எனது ஆட்டம் மேம்பட்டுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: வில்லியம்சனுடன் நேரம் செலவிட்டதை வாழ்வில் மறக்கமுடியாது...!