ETV Bharat / opinion

அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற சபதம் எடுத்துள்ள டிரம்ப்...இந்தியா எதிர்பார்ப்பது என்ன? - TRUMP

அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவது என டிரம்ப் சபதம் எடுத்துள்ளார். இந்த சூழலில் டிரம்பின் இரண்டாவது ஆட்சி கால நிர்வாகத்தில் இந்தியா என்ன எதிர்பார்க்க முடியும்?

டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் (Image credits-AP)
author img

By Rajkamal Rao

Published : Nov 8, 2024, 5:40 PM IST

ஹைதராபாத்: அமெரிக்காவின் பாரம்பரிய ஊடகங்களின் 24 மணி நேர பெரும் தாரளமய எதிர்ப்பையும் மீறி டொனால்டு டிரம்ப் 47 ஆவது அதிபராக வெற்றி பெற்றிருக்கிறார். டெய்லர் ஸ்விஃப்ட், பியான்ஸ், ஜெனிபர் லோபஸ், எமினெம், பில்லி எலிஷ், கார்டி பி, ஹாரிசன் ஃபோர்டு, ரிச்சர்ட் கெர் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே போன்ற எண்ணில் அடங்கா ஹாலிவுட் உலக நட்சத்திரங்கள் தங்களின் நேரத்தை செலவழித்து துணை அதிபர் கமலா ஹாரீஸை அதிபராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டனர். எனவே அவர் ஊக்கமான பரப்புரையை மேற்கொண்டார்.

அரசியல் ஆதரவைப் பொறுத்தவரை முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா, பில் கிளிண்டன், அவர்களின் மனைவிகள் மிச்சலி ஒபாமா, ஹில்லாரி கிளிண்டன் ஆகியோருடன் துணை அதிபர் டிக் செனி மற்றும் அவரது மகள் லிஸ் செனி உள்ளிட்டநூற்றுக்கணக்கான குடியரசு கட்சி அரசியல்வாதிகளும், அத்துடன் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு வளாகத்தின் 150 உறுப்பினர்களும் தீவிரமாக அவருக்கு பரப்புரை மேற்கொண்டனர். ஆனால், முடிவில் எல்லாம் தோற்று விட்டது.

கமலா ஹாரீஸ்
கமலா ஹாரீஸ் (Image credits-AP)

டிரம்ப்பின் அசாதாரண சாதனை: பெரும்பான்மையை விட அதிகமாக டிரம்ப் 295 எலக்ட்ரோல் காலேஜ் வாக்குகளைப் பெற்று கமலா ஹாரீசை தோற்கடித்தார். கமலா ஹாரிஸ் 226 எலக்ட்ரோல் காலேஜ் வாக்குகளை மட்டும் பெற்றார். அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு 270 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் இருந்தால் போதுமானது. அரிசோனா மற்றும் நெவாடா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. எண்ணப்பட்டு வரும் மாநிலங்களிலும் டிரம்ப் முன்னணியில் இருப்பதால் 312 எலக்டோரல் காலேஜ் வாக்குகளைப் பெற்றுவிடுவார். இது ஒரு அசாதாரண சாதனையாக இது கருதப்படுகிறது.

டிரம்ப்பின் திறன்கள் நன்கு அறியப்பட்டவை. அமெரிக்காவை எப்போதும் ஈர்க்கும் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக இருக்கிறார். டிரம்ப்புக்கு சொந்தமாக கோல்ப் ரிசார்ட், ஆடம்பர ஹோட்டல்கள், அபார்ட்மெண்ட்கள் உலகம் முழுவதும் உள்ளன. அவர் என்பிசி/யுனிவர்சல் தொலைகாட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவின் நட்சத்திரமாக தனது பெயரை உருவாக்கினார்.ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடக நிறுவனத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். 2021ஆம் ஆண்டு டிரம்ப்பின் முகநூல், ட்விட்டர்(இப்போது எக்ஸ் என்று அழைக்கப்படுகிறது) பக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டன இதையடுத்தே இந்த சமூக வலைதள நிறுவனத்தை அவர் தொடங்கினார். இந்த நிறுவனம் இப்போது 7 பில்லியன் டாலர் கொண்ட நிறுவனமாக உள்ளது. 2016ஆம் ஆண்டு டிரம்ப் வெற்றி பெற்றபோது எந்த ஒரு அரசியல் பதவியையும் ஒருபோதும் அவர் வகித்திருக்கவில்லை. நேரடியாக அதிபர் பதவிக்கு அவர் வெற்றி பெற்றார். வெள்ளை மாளிகையில் அதிபராக இருந்த காலகட்டத்தில் டிரம்ப் தமது சம்பளமாக ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே பெற்றுக் கொண்டார்.

டொனால்டு டிரம்ப் வெற்றியை அறிவிக்கும் இங்கிலாந்து பத்திரிகைகள்
டொனால்டு டிரம்ப் வெற்றியை அறிவிக்கும் இங்கிலாந்து பத்திரிகைகள் (Image credits-AP)

அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கும் திட்டம்: டிரம்ப்பின் முதலாவது ஆட்சி காலத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் குறைந்திருந்தன. இதனால், அமெரிக்காவின் எல்லைப் பகுதிகள் பாதுகாப்பாக இருந்தன. பணவீக்கம் குறைவாக இருந்தது. அவருடைய பதவி காலம் முழுவதும் எந்த ஒரு புதிய போரும் நடக்கவில்லை. அமெரிக்கா முதன் முறையாக 2019ஆம் ஆண்டு டிசம்பரில் எரிசக்தியில் தன்னிறைவு பெற்றது. தேவையான எண்ணைய் மற்றும் இயற்கை வாயுக்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டன. இறக்குமதியை சார்ந்திருக்கவில்லை. வலுவான அமெரிக்க ராணுவத்தின் மீது டிரம்ப் நம்பிக்கை வைத்திருந்தார். நாட்டின் விமானப்படைக்கு துணையாக அமெரிக்க விண்வெளி படையை உருவாக்கினார்.

அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள் என்ற திட்டத்தை டிரம்ப் கையில் எடுத்தார். மீண்டும் அமெரிக்காவை சிறந்ததாக்குவேன் என்று வாக்காளர்களுக்கு அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். முன்னாள் தொழிலதிபர், ஆர்ட் ஆஃப் தி டீல் என்ற புத்தகத்தின் எழுத்தாளருமான டிரம்ப், அமெரிக்காவை ஒரு வணிக நிறுவனமாக நடத்தும் கருத்தாக்கத்தை கொண்டிருந்தார். பொது உணர்வின் அடிப்படையில் எப்போதுமே அமெரிக்காவுக்கு சாதகமான ஊக்கத்தொகை திட்டங்கள், கட்டணங்கள் ஆகியவற்றின் வாயிலாக வெளிநாட்டு அரசுகளுடன், நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை உருவாக்குதல் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

கடந்த மாதம் சிகாகோவில் உள்ள பொருளாதார கிளப்பில் பேசிய டிரம்ப், இரண்டாவது கால கட்ட ஆட்சியை எவ்வாறு மேற்கொள்ளப்போகிறார் என்று கூறியிருந்தார். டயோட்டா போன்ற வெளிநாட்டு கார் தயாரிக்கும் நிறுவனம் அமெரிக்காவில் புதிய தொழிற்சாலை அமைக்க முதலீடு செய்தால், அந்த நிறுவனத்துக்கு 15% வரி விதிக்கப்படும்(அமெரிக்காவின் தற்போதையை பெருநிறுவனங்களுக்கான வரி என்பது 21% ஆக இருக்கிறது). ஒரு வெளிநாடு, விலை மலிவான பொருட்களை கொடுத்து அமெரிக்காவின் சந்தையை பிடித்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

டிரம்பின் இரண்டாவது ஆட்சி கால நிர்வாகத்தில் இந்தியா என்ன எதிர்பார்க்க முடியும்?: இதற்கு டிரம்ப்-மோடி இடையிலான நட்புணர்வு உதவக் கூடும். ஒரு தொழிலதிபராக , உறவுகளை டிரம்ப் மதிக்கக் கூடியவர். ஒரு இந்திய தலைவர் மற்றும் அமெரிக்க அதிபர் என்ற வகையில் டிரம்ப்-மோடி இடையிலான உறவு குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூஸ்டனில் நடைபெற்ற ஹவ்டி மோடி என்ற கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்றார். ஒரு சமூக ரீதியிலான கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பங்கேற்பது அதுவே முதன்முறையாக இருந்தது. அதன் பிறகு ஐந்து மாதங்கள் கழித்து கோவிட்-19 உலகை பீடிக்கும் முன்பாக இந்தியாவுக்கு வருகை தந்த டிரம்ப், குஜராத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரண்டு கூட்டங்களிலும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

அமைதியான அணுசக்திக்கான தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற சில சலுகைகளை ட்ரம்ப்பிடம் இருந்து மோடி பெற முடியும் என்றாலும், அமெரிக்காவின் நலன்களுக்கானவை என ட்ரம்ப் நம்பினால், இந்தியாவை தண்டிக்க டிரம்ப் தயங்க மாட்டார் என்பதை நினைவில் வைத்து இந்தியா எச்சரிக்கையுடன் தொடர வேண்டும்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் கட்டணங்கள் விதிக்கக்கூடும். கட்டணங்களைப் பொறுத்தவரை டிரம்ப்பின் தத்துவம் குறித்து டிரம்ப்பின் பொருளாதார மாற்றத்துக்கான குழுவின் தலைவர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், "நாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கட்டணம் விதிப்போம். நாங்கள் தயாரிக்காத பொருட்களுக்கு கட்டணம் விதிக்க மாட்டோம்,"என்று சொல்லி இருக்கிறார்.

இந்தியாவின் ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?: 2022-23ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவுக்கு 80 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. மருந்து துறையில் 12 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் மருத்துவ சுகாதாரத்துக்கான செலவுகள் அதிகரித்திருப்பதால் இதற்கு கட்டணம் விதிக்கப்படாது. ஒருவேளை கட்டணம் விதித்தால் இந்திய உற்பத்தியாளர்கள் அந்த கட்டணத்தை அமெரிக்க வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்தும் வகையில் விலை நிர்ணயிக்கலாம் என்பதால் இதனை டிரம்ப் விரும்ப மாட்டார். அமெரிக்கா எப்போதுமே முதலில் வர வேண்டும் என்பதை டிரம்ப் கண்ணோட்டமாக கொண்டிருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

முதன்மையாக வைரம் உள்ளிட்ட ஜெம்ஸ், தங்க நகைகள் பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கும் கட்டணம் விதிக்கப்படாது. ஏனெனில் அமெரிக்காவில் ஜெம்ஸ், தங்க நகைகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அமெரிக்க நிறுவனங்கள் அதிக அளவு தொழில்நுட்பப் பணிகளை இந்தியாவுக்கு அவுட் சோர்சிங் முறையில் தருகின்றன. இதனால், அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர் என டிரம்ப் கவலையில் இருக்கிறார். எனவே அமெரிக்க நிறுவனங்களுக்காக தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்களுக்கு கட்டணங்களை விதிப்பார். கூடுதல் கட்டணத்தை அமெரிக்க நிறுவனங்களே செலுத்தும் வகையில் செய்ய முடியாவிட்டால் அது இந்திய நிறுவனங்களுக்கான லாபத்தில் கசப்பை ஏற்படுத்தும். கடும் போட்டி நிலவும் சூழலில் இதில் சிக்கல் ஏற்படக் கூடும். இந்தியாவில் குறைந்த அளவிலான லாப செயல்பாட்டு, தற்போது இருப்பதை விட, அதிக தேவையுள்ள பணியிடங்களை உருவாக்கும்.

ஜவளி, ஆயத்த ஆடைகள் (16-18 பில்லியன் டாலர் ஏற்றுமதி), ஆட்டோ மொபைல் மற்றும் உதிரி பாகங்கள் (5-7 பில்லியன் டாலர் ஏற்றுமதி), மசாலா மற்றும் கடல் உணவு போன்ற வேளாண் பொருட்கள்(5 பில்லியன் டாலர்) இவை அனைத்தும் குறித்து மோடி டரம்ப்பிடம் பேச்சுவார்தை நடத்தா விட்டால் டிரம்ப் கட்டணங்கள் விதிக்கக் கூடும்.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வரும்: ரஷ்யாவுடன் போரிடுவதற்காக அமெரிக்கா உக்ரைனுக்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் அனுப்புவதை டிரம்ப் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். தாம் பதவிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறியிருக்கிறார். போர் முயற்சிக்காக அமெரிக்கா ஏற்கனவே 200 பில்லியன் டாலர்களை செலவழித்திருக்கிறது. இந்த தொகை அமெரிக்காவில் கட்டமைப்புகளை உருவாக்க உதவும் என்று டிரம்ப் நம்புகிறார்.

ரஷ்யா உக்ரைனை தாக்கத் தொடங்கியதில் இருந்தே ஒரு நுட்பமான சமநிலையை மோடி கொண்டிருக்கிறார். இது ரஷ்யாவின் தவறு என மோடி ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்றும் தொடர்ந்து மோடி கூறி வருகிறார். இந்தியாவின் ரஷ்ய நிலைப்பாட்டை பைடன்-ஹாரீஸ் நிர்வாகம் வெறுத்தது. இந்தியாவிற்கு எதிரான இரண்டாம் நிலை பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் நிலவியது. ஹாரிஸ் வெற்றி பெற்றிருந்தால் இந்த கொள்கை தொடர்ந்திருக்கும்.

போர் முடிவுக்கு வந்தால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை டிரம்ப் நீக்குவார். ரஷ்யாவின் கச்சா எண்ணைய் புழக்கம் அதிகரிக்கும், சர்வதேச எண்ணைய் வளம் அதிகரிக்கும். எனவே பெட்ரோலிய பொருட்கள் விலை குறையும், இந்திய நிதி அமைச்சகம் பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பதை நிறுத்தாது. சர்வதேச கச்சா எண்ணைய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் குறையாது. இது டிரம்புக்கு தொடர்பு இல்லாத உள்நாட்டு விவகாரம் ஆகும்.

விநியோகச் சங்கிலி பல்வகைப்படுத்தல் முயற்சிகள் இந்தியாவுக்கு உதவக் கூடும். சீனாவை ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக டிரம்ப் பார்க்கிறார். இந்த விஷயத்தில் சீனாவை தள்ளி வைப்பதற்காக இந்தியாவின் முதலீடுகளை டிரம்ப் இதில் வரவேற்பார். அமெரிக்க நிறுவனங்கள் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்தவும், துடிப்பான உற்பத்திப் பொருளாதாரமாக இந்தியாவின் நிலையை அதிகரிக்கவும் டிரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

எச்-1பி விசா நடைமுறை, கிரீன் கார்டு, குடும்ப விசா ஆகியவற்றைப் பொறுத்தவரை, டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப்படுவர் என்று திரும்ப திரும்ப சொல்கிறார். எனவே சட்டரீதியான குடியேற்றங்களுக்கு அவர் ஆதரவாக இருக்கிறார். டரிம்ப் எலான் மஸ்கின் ரசிகராக இருக்கிறார். தெற்கு ஆப்ரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கிறார். பேபால், டெல்சா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஸ்பேஸ் லிங்க் ஆகியவற்றின் நிறுவனர். எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளராக இருக்கிறார். டிரம்பின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர். கிரீன் கார்டுகள் வழங்குவதில் தகுதி முக்கியமாக இருக்க வேண்டும் என்று மஸ்க் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறார். சட்டவிரோத மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றம் ஆகிய பிரச்சனைகள் தீர்க்கப்படும் வகையில் டிரம்ப் நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முடியும்.

ஹாரீஸை விடவும் டிரம்ப் இந்தியாவின் சிறந்த கூட்டாளராக இருப்பார். தம்மை கருப்பர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் தென் இந்தியாவில் தமிழ் பிராமண தாய்க்கு பிறந்த கமலா ஹாரீஸ், இந்தியா-அமெரிக்க உறவை முன்னெடுக்க ஆர்க்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை. இந்த சூழலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப்புக்கு வாழ்த்துகள்!

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Image credits-ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.