கோயம்புத்தூர்: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவருக்கு அங்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்ததாக தெரிகிறது. அவரது உடல் நாளை (நவ. 9) காலை கோயம்புத்தூர் கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க : கொய்யாப்பழ ஜூஸை கூடுதல் விலைக்கு விற்ற சூப்பர் மார்க்கெட்.. நுகர்வோர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
கடந்த 1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த பொழுதே, அதிமுக பொதுச் செயலாளர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த அவர், பின்னர் அதிமுகவில் இணைந்தார்.
கோவை செல்வராஜ் காலமானார்#KovaiSelvaraj #Death #DMK #tamil_nadu #etvbharattamilnadu pic.twitter.com/7krAVZsbnL
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) November 8, 2024
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி ஆதரவாளராக இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவுடன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கோவை செல்வராஜ் மறைவிற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்