ETV Bharat / sports

தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி - பதக்கங்களை அள்ளிய தமிழ்நாடு!

author img

By

Published : Jan 1, 2020, 5:34 PM IST

உஜ்ஜையினியில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் வென்று தமிழ்நாடு திரும்பிய வீரர்களுக்கு சேலம் ஜங்சன் ரயில்வே நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

tamil-nadu-to-win-medals
tamil-nadu-to-win-medals

இந்திய பள்ளி குழுமம் சார்பில் கடந்த டிசம்பர் 23 முதல் 28ஆம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள உஜ்ஜைனியில் தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக சேலம், நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 61 வீரர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டிகள் அண்டர் 14, 17, 19 வயதுகள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 4 தங்கம், 8 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 28 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

தமிழ்நாடு திரும்பிய வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இதனையடுத்து, பதக்கங்களுடன் வீடு திரும்பிய மாணவர்களுக்கு, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கடந்த நவம்பர் மாதம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டிகளில் பங்குபெற்று தேர்வானவர்களே, தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:2019 Best Sports Moments: உலக ராபிட் செஸ் வென்ற இந்தியர், மாஸ் காட்டிய தமிழர்கள்!

Intro:உஜ்ஜையினியில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 28 பதக்கங்களை வென்று தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு சேலம் ஜங்சன் ரயில்வே நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.Body:
இந்திய பள்ளி குழுமம் சார்பில்
கடந்த டிசம்பர் 23 முதல் 28 ஆம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள உஜ்ஜைனியில் தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் தமிழகம் சார்பாக சேலம் நாமக்கல் ஈரோடு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 61 வீரர்கள் பங்கேற்றனர்.
14, 17, 19 வயது என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் 4 தங்கம் 8 வெள்ளி 16 வெண்கலப் பதக்கங்களை என 28 பதக்கங்களை வென்று அசத்தினர்.தமிழகம் சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று இன்று சேலம் திரும்பிய வீரர்களுக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கடந்த நவம்பர் மாதம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டிகளில் பங்கு தேர்வானங்கள் தேசிய அளவிலான போட்டி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.