தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் (NADA-National Anti-Doping Agency) இன்று விளையாட்டு வீரர்கள், தங்களின் இருப்பிட சான்றிதழை மூன்று மாதங்களுக்கு முன்பே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தடகள வீரர்கள் இதுபோன்ற மூன்று அறிவிப்புகளைத் தவறவிட்டால், அவர்கள் ஊக்க மருந்து எதிர்ப்பு விதி மீறலின் கீழ் நான்கு ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம்.
ஆகவே, தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு முன்பே தங்கள் இருப்பிடத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறியவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பதிவால் இனவெறி சர்ச்சையில் சிக்கிய இஷாந்த் சர்மா