ETV Bharat / sports

அமெரிக்காவில் பயிற்சி பெற பஜ்ரங் புனியாவிற்கு அனுமதி!

இந்திய அணியின் நட்சத்திர மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, அமெரிக்கா சென்று ஒரு மாதம் பயிற்சியை மேற்கொள்ள மிஷன் ஒலிம்பிக் செல் அனுமதி வழங்கியுள்ளது.

Mission Olympic Cell approves Bajrang Punia's one-month training camp in USA

author img

By

Published : Nov 28, 2020, 8:20 PM IST

இந்திய அணியின் நட்சத்திர மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. இவர் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளார்.

இந்நிலையில் கரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் வைரசின் தாக்கம் குறையத் தொடங்கியதும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சோனாபட்டில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு அமைச்சக பயிற்சி மையத்தில், பயிற்சிகளை மேற்கொண்டுவந்தார். பின்னர் சர்வதேச வீரர்களுடன் அமெரிக்காவில் ஒருமாத காலம் பயிற்சி மேல்கொள்வதற்கான அனுமதியையும் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக்குழுவிடன் கேட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 50ஆவது ஒலிம்பிக் மிஷன் செல் கூட்டத்தின்போது, இந்தியாவின் பஜ்ரங் புனியா அமெரிக்காவில் பயிற்சி மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி அமெரிக்காவில் சர்வதேச வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ளும் பஜ்ரங் புனியா, தனது பயிற்சியாளர் எம்சாரியோஸ் பெண்டினிடிஸ் மற்றும் பிசியோ தனஞ்செய் ஆகியோருடன் அங்கு செல்லவுள்ளார்.

இதையும் படிங்க:வுமன்ஸ் பிக் பேஷ்: 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிட்னி தண்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.