ETV Bharat / sports

பதல்பூரி குருத்வாராவில் மில்கா சிங் அஸ்தி - மில்கா சிங் அஸ்தி கரைப்பு

தடகள வீரர் மில்கா சிங்கின் அஸ்தி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதல்பூரி குருத்வாராவில் கரைக்கப்பட்டது.

மில்கா சிங் அஸ்தி கரைப்பு
மில்கா சிங் அஸ்தி கரைப்பு
author img

By

Published : Jun 21, 2021, 12:11 AM IST

இந்தியாவின் தடகள ஜாம்பவான் மில்கா சிங் கடந்த வெள்ளிக்கிழமை(ஜூன்.18) கோவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக காலமானார். பறக்கும் சீக்கியர் எனப் போற்றப்படும் மில்கா சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் ஜூன்19 தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மில்கா சிங்கின் அஸ்தியானது நேற்று(ஜூன் 20) கிராட்பூரில் உள்ள பதல்பூரி சாஹிப் குருத்வாராவில் ஓடும் சட்லஜ் நதியில் கரைக்கப்பட்டது. இந்த சடங்கில் மில்கா சிங்கின் குடும்பத்தினருடன் பஞ்சாப் மாநில ஆளுநர் வி.பி. சிங் பந்த்னோர், மாநில நிதியமைச்சர் மன்ப்ரீத் சிங் பாதல், ஹரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

மில்கா சிங்கின் மறைவை ஒட்டி பஞ்சாப் மாநில முதலமைச்சர் ஒரு நாள் விடுமுறையுடன் கூடிய அரசு மரியாதைக்கு உத்தரவிட்டார். மேலும், மில்கா சிங்கின் நினைவாக, பாட்டிலாவில் உள்ள விளையாட்டு பல்கலைகழகத்தில் அவர் பெயரில் இருக்கை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: யார் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்: சச்சினா சங்கக்காராவா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.