அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு, பின் Black Lives Matter என்ற வாசகத்துடன் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கறுப்பின மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் விதமாக 100 மில்லியன் டாலர் வழங்கவுள்ளதாக தொழில்முறை கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கறுப்பின மக்களின் வாழ்க்கை முக்கியமானது. இது சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அல்ல. இந்த நாட்டில் நிறவெறி முழுமையாக நீக்கப்படும் வரை, கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற நாங்கல் உறுதியேற்கிறோம்.
மைக்கேல் ஜோர்டன் மற்றும் ஜோர்டன் பிராண்ட் சார்பாக கறுப்பின மக்களுக்காக செயல்பட்டு வரும் அமைப்புகளுக்கு அடுத்த 10 வருடங்களுக்கு 100 மில்லியன் டாலர் வழங்கவுள்ளோம். இது இந்திய மதிப்பில் ரூ.756 கோடி. இதன் மூலம் மக்களின் கல்வி, முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.