கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இப்பெருந்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தி வந்த மத்திய அரசு, நேற்று சில தளர்வுகளுடன் கூடிய நான்காம் கட்ட ஊரடங்கு உத்த்ரவை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி இந்தியாவில் விளையாட்டு வளாகங்கள் மற்றும் மைதானங்கள் திறப்பதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வழங்கியது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகையில், “நான்காம் கட்ட ஊரடங்கின்போது விளையாட்டு வளாகங்கள் மற்றும் மைதானங்களை திறப்பதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. ஆனால் அங்கு பார்வையாளர்கள் செல்வதற்கான தடையை இன்னும் நீட்டித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:6 சிக்சர்கள் அடித்ததற்கான காரணம் என்ன? - ரகசியத்தை உடைத்த யுவி