ETV Bharat / sports

ஒலிம்பிக்கில் தங்கம் பெற முயற்சிப்பேன் - மேரி கோம் - உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் சாதனை

இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார்.

மேரி கோம், Mary Kom
மேரி கோம், Mary Kom
author img

By

Published : Dec 24, 2019, 9:05 PM IST

இந்திய மகளிர் குத்துச்சண்டையில் நட்சத்திர வீரராக வலம்வருபவர் மேரி கோம். மணிப்பூரைச் சேர்ந்த 36 வயதான மேரி கோம், மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்பும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறார். அந்த வகையில் இவர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தத் தொடரில் அதிக பதக்கங்கள் (6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) வென்ற நபர் என்ற சாதனையை படைத்தார்.

மேரி கோம், Mary Kom
மேரி கோம்

இதனிடையே பிரபல செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த மேரி கோம், "தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, நான் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிவருகிறேன். எனக்குத் தேவையான உதவிகளை அரசு வழங்கியுள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதற்கு என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன்.

தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளாக எனது நாட்டிற்காக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுவருகிறேன். இந்தப் பயணத்தில் நான் சிறப்பாகச் செயலாற்றியிருக்கிறேன். அதிலும் குழந்தைகள் பிறந்த பின்பு பல்வேறு பொறுப்புகளுடன் போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

மேரி கோம், Mary Kom
மேரி கோம்

நான் எப்போதும் 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வென்ற பதக்கங்களை நினைவில் வைத்துக்கொள்வேன். பதக்கம் வெல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இருப்பினும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முயற்சி செய்வேன்" என்றார்.

மேலும், இந்தாண்டு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீராங்கனைகளை நினைத்து பெருமைப்படுவதாகக் கூறிய மேரி கோம், மேன்மேலும் அவர்கள் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். இதுதவிர கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகளையும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: எச்ஐவி பாதிப்பு குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய 'நாகினி'

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/other-sports/mc-mary-kom-targets-medal-in-tokyo-olympics/na20191224184319834

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.