2019ஆம் ஆண்டுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் பங்கேற்றுள்ளார். முதல் சுற்றில் மேரி கோம்-ற்கு பை அளிக்கப்பட்டதையடுத்து, நேற்று நேரடியாக இரண்டாவது சுற்றில் களமிறங்கினார்.
இந்த போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜுடாமஸ் ஜிட்போங்கை எதிர்த்து மேரி கோம் பங்கேற்றார். போட்டியின் ஆரம்பத்தில் சிறிது நேரம் அடக்கி வாசித்த மேரி கோம், இரண்டாவது சுற்றின் தொடக்கத்திலிருந்து தனது ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு மாறினார்.
பதில் தாக்குதல் நடத்திய தாய்லாந்து வீராங்கனையின் ஆட்டம் உலக சாம்பியனிடம் பலிக்கவில்லை. இதனால் இறுதியாக 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதுவரை 49 கிலோ எடைப்பிரிவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள மேரி கோம், ஒலிம்பிக் தொடருக்காக 51 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: விவசாய பூமியில் விளைந்த இந்தியாவின் தங்க மங்கை ஹிமா தாஸ்!