ETV Bharat / sports

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது பெற்ற மாரியப்பன் பிரத்யேக பேட்டி! - பிரத்யேக பேட்டி

மத்திய அரசால் விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது பெற்ற மாரியப்பன் தங்கவேலுவின் பிரத்யேக பேட்டியை பார்க்கலாம்.

Mariappan Thangavelu interview to ETB
Mariappan Thangavelu interview to ETB
author img

By

Published : Aug 21, 2020, 8:39 PM IST

மத்திய அரசால் விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் இன்று வெளியானது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாரியப்பன் தங்கவேலு ஈடிவி பாரத் இணையதளத்துக்கு அளித்த பிரத்தேக பேட்டியில், “இந்தாண்டு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வெற்றிக்கு உதவிய தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, இந்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் என்னைப் போல் நிறைய வீரர்கள் நாட்டிற்காக தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களையும் இது போன்று விருதுகள், பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்” என்றார்.

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது பெற்ற மரியப்பன் தங்கவேலுவின் பிரத்யேக பேட்டி

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார்.

இதற்காக மத்திய அரசு 2017ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, அர்ஜூனா விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாரியப்பன் தங்கவேலு, ரோஹித் சர்மாவுக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.