ஜப்பான் தலைநகர் டோக்யோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த இந்தியரும் தமிழருமான மாரியப்பன் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் பங்கெடுத்தார். இதற்காக இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற இறுதிப்போட்டியில், மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி, உலகளவில் இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதேபோல், இந்தியாவில் இருந்து பங்கேற்ற சரத் குமார் என்ற இளைஞரும் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒரே போட்டியில் இந்தியர்கள் இருவர் பதக்கங்களை வென்ற நிலையில், இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியாவிற்கு 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் மோடி, மாரியப்பனின் சாதனையால் தேசம் பெருமை அடைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாரியப்பன் மீண்டும் தங்கம் வெல்வார் - தாயார் சரோஜா நம்பிக்கை