ETV Bharat / sports

துப்பாக்கி சுடுதலில் புதிய உலக சாதனைப் படைத்த மனு பாக்கர்! - 10 மீட்டர் பிரிவில் அதிக புள்ளிகள் எடுத்த வீராங்கனை

சீனா: உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

World Cup Final
author img

By

Published : Nov 21, 2019, 1:27 PM IST

உலக துப்பாகி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு, இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனையான மனு பாக்கர் பங்கேற்றார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மனு பாக்கர் 244.7 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதன் மூலம் 17 வயதே ஆன மனு பாக்கர் உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் பிரிவில் அதிக புள்ளிகள் எடுத்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.

மேலும் இவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சிந்துவிற்குப் பிறகு தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக இவர் இந்த மாதம் நடைபெற்ற ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் தங்கம் வென்று சாதனைப் படைத்தார் இளவேனில்!

Intro:Body:

World Cup Final: Manu Bhaker bags gold, breaks junior world record in 10m Air Pistol

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.