பர்மிங்ஹாம்: காமன்வெல்த் 2022 தொடரின் கடைசிநாளான இன்று (ஆக. 8) ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் இளம் வீரர் லக்ஷயா சென், மலேசியா வீரரை எதிர்கொண்டார். போட்டியின் முதல் செட்டை 19-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார்.
இருப்பினும், இரண்டாவது செட்டை 21-9 என்ற கணக்கில் அதிரடியாக வென்று போட்டியை சமன்செய்தார். அடுத்து, வெற்றியை முடிவு செய்யும் மூன்றாவது செட்டை 21-16 என்ற கணக்கில் வென்று தங்கத்தை தட்டிச்சென்றார்.
லக்ஷயா சென் முதன்முறையாக காமன்வெல்த் தொடரில் பங்கேற்ற நிலையில், முன்னதாக கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றிருந்தார்.
தற்போது, தங்கம் வென்று இத்தொடரில் இரண்டாவது பதக்கத்தைப்பெற்றார். இதுவரை இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 57 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: காமன்வெல்த் 2022: தங்கம் வென்றார் பிவி சிந்து!