ETV Bharat / sports

தேசிய விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத் தொகை உயர்வு: கிரண் ரிஜிஜூ - ராம்நாத் கோவிந்த்

டெல்லி: தேசிய விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத் தொகையை உயர்த்துவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

Kiren Rijiju announces hike in prize money for National Sports Awards

author img

By

Published : Aug 29, 2020, 3:34 PM IST

Updated : Aug 29, 2020, 5:21 PM IST

இந்திய ஹாக்கி அணியின் முன்னோடி தயான் சந்த் பிறந்த நாளை கவுரவிக்கும் விதாமாக மத்திய அரசு 2012ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது. மேலும், இந்த தினத்தில் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு கேல் ரத்னா, அர்ஜூனா, தயான்சந்த், துரோணாச்சாரியா ஆகிய விருதுகளை வழங்கியும் கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், தயான் சந்த்தின் 115ஆவது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக, இந்தாண்டின் தேசிய விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத் தொகையை உயர்த்துவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய கிரண் ரிஜிஜூ, தேசிய விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத் தொகையை அதிகரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதன்படி, அர்ஜூனா விருதின் பரிசுத் தொகையை ரூ.15 லட்சமும், கேல் ரத்னா விருதின் பரிசுத் தொகையை ரூ.25 லட்சமாகவும் உயர்த்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக அர்ஜூனா விருது பெருவோருக்கு ரூ.5 லட்சமும், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பேருவோருக்கு ரூ.7.5 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேசிய விளையாட்டு விருதுகள் பற்றிய முக்கிய விவரங்கள்

Last Updated : Aug 29, 2020, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.