ஹாங்சோ (சீனா): ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று வில்வித்தை மகளிர் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் தங்கப்பதக்கத்தை வென்று உள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இது, இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் பெறும் ஹாட்ரிக் தங்கப்பதக்கம் ஆகும். தென்கொரிய வீராங்கனையான சோ சாவென் என்பவரை 149 - 145 என்ற புள்ளிக் கணக்கில் வென்றதால், இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் தங்கப்பதக்கத்தை வென்றார். அதேநேரம், வில்வித்தை மகளிர் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி சுவாமி வெண்கலப்பதக்கம் வென்று உள்ளார்.
இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் வில்வித்தை பதக்கம் மட்டும் ஒன்பதாக இருக்கிறது. மேலும், இது குறித்து தங்கப் பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வென்னம் கூறுகையில், “இப்போது என்னிடம் சில வார்த்தைகள் மற்றும் அதிகளவிலான உணர்ச்சிகள் மட்டுமே உள்ளது. நான் யோசிப்பதற்கு சில நேரம் வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சார்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியா vs ஆஸ்திரேலியா; வெற்றியை தீர்மானிப்பது எது? - ராகுல் டிராவிட் பதில்!