ETV Bharat / sports

துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை: தங்கம் வென்றார் ரஹி சர்னோபத்! - மனு பாக்கர்

ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல் உலக கோப்பையில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப் பதக்கத்தை வென்றார்.

ரஹி சர்னோபத்
ரஹி சர்னோபத்
author img

By

Published : Jun 28, 2021, 6:51 PM IST

ஓசிஜெக் (குரேஷியா): ஐஎஸ்எஸ்எஃப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி குரேஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றிருக்கிறது.

முதல் தங்கம்

இதில், இன்று நடைபெற்ற 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிற்கான போட்டியில், 30 வயதான இந்திய வீராங்கனை ரஹி சர்னோபாத் 39 புள்ளிகளை பெற்று, இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்று தந்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாத்தில்தே லமோலே ( Mathilde Lamolle) 31 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

நான்காம் பதக்கம்

இந்தியாவின் இளம் வீராங்கனையான மனு பாக்கர் ஏழாவது இடத்தை பிடித்து ஏமாற்றமளித்தார். இதில், நேற்று முன்தினம் (ஜுன் 26) நடைபெற்ற கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் - சவுரப் சவுத்ரி இணை வெள்ளிப் பதக்கத்தை வென்றது. அதற்கு முன்னர் இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது.

இந்த உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய துப்பாக்கி சுடுதல் அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க டோக்கியோ புறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இலங்கைக்கு புறப்பட்டது தவான் - டிராவிட் இந்திய இளம் படை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.