ETV Bharat / sports

ரசிகர்கள் முன்னிலையில் டோக்கியோ ஒலிம்பிக்: தாமஸ் பேச் உறுதி

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் தொடரில் ரசிகர்கள் நிச்சயம் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பேச் உறுதி தெரிவித்துள்ளார்.

ioc-president-bach-confident-about-fans-attendance-in-tokyo-olympics

author img

By

Published : Nov 16, 2020, 4:55 PM IST

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடக்க வேண்டிய ஒலிம்பிக் தொடர் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒலிம்பிக் நிர்வாகம் ஜப்பானின் டோக்கியோவில் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பேச் ஜப்பான் சென்றார். அங்கு ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழுவினரைச் சந்தித்தார்.

தாமஸ் பேச்   - ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா

இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' கரோனா வைரசை எதிர்கொள்ள ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவினரின் நடவடிக்கை சிறப்பாக உள்ளது. ஒலிம்பிக் தொடருக்காக நாங்கள் மிகப்பெரிய விஷயங்களை ஒன்றாக இணைக்கிறோம். அதில் நாம் கற்பனை செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் வைக்கிறோம்.

அடுத்த ஆண்டு அனைத்து வீரர்களுக்கும் பாதுகாப்பான சூழலை நிச்சயம் உருவாக்குவோம் என்று நம்புகிறேன். அதேபோல் ஒலிம்பிக் மைதானங்களில் நிச்சயம் ரசிகர்கள் இருப்பார்கள். அதற்கான நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுள்ளோம்'' என்றார்.

இதையும் படிங்க: ஏடிபி பைனல்ஸ் போட்டி; ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்-ஐ பழிதீர்த்த டொமினிக் தீம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.