ETV Bharat / sports

‘வாடா’ தடைசெய்த ஊக்கமருந்தை உபயோகித்த இந்திய வீராங்கனை! - திவ்யா குமார்

உலக ஊக்கமருந்து தடுப்பாணையத்தால் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை இந்திய குத்துச்சண்டை வீராங்கனை திவ்யா குமாரி உபயோகித்தது உறுதியாகியுள்ளதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பாணையம் தெரிவித்துள்ளது.

Indian boxer Divya kumar tested positive fro prohibited substance by NADA

author img

By

Published : Feb 29, 2020, 7:51 AM IST

உலக ஊக்கமருந்து தடுப்பாணையம் (WADA) கடந்த ஜனவரி மாதம் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய நாட்டிற்கு நான்கு ஆண்டுகள் தடைவிதித்து அதிரடி உத்தரவை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அமைப்பு சார்பில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளின் பட்டியலை வெளியிட்டு, அதனடிப்படையில் சர்வதேச நாடுகளுடைய வீரர்களைப் பரிசோதிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை திவ்யா குமார், வாடாவால் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உபயோகித்துள்ளதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பாணையம் (NADA) இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாடா வெளியிட்டுள்ள அறிக்கையில், குத்துச்சண்டை வீராங்கனை திவ்யா குமாரி, வாடாவால் தடைசெய்யப்பட்ட பீட்டா-2 அகோனிஸ்டுகள் வகை ஊக்கமருந்தை உபயோகித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இதுகுறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீச்சல் பிரிவு போட்டியில் மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற சீனாவின் சன் யங், ஊக்கமருந்து சர்ச்சையில் சீக்கி எட்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டுள்ள சம்பவம் ஓய்வதற்குள், தற்போது இந்திய வீராங்கனையின் சோதனை முடிவுகள் வெளிவந்து விளையாட்டு வீரர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளின் பட்டியலை வெளியிட்ட ’வாடா’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.