இந்திய தடகள கூட்டமைப்பின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ். இவர் 2003ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலம் வென்றவர். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனையும் இவர் தான்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், '' இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிகளை எப்படி அனைவரையும் கவரும் வகையில் கொண்டாட வேண்டும் என்பதை கற்றுத்தர வேண்டும். ஏனென்றால் பார்வையாளர்கள் விரும்பும் நாயகர்களாக இருக்க வேண்டும்.
பார்வையாளர்களை எப்படி தொடர்ந்து திரும்பி பார்க்க வைக்க நாம் கற்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள விளையாட்டு வீரர்கள், இந்த யுக்தியை தான் பயன்படுத்துகிறார்கள். நமது வேகம், நமது ஜம்ப், நமது விளையாட்டு ஆகியவற்றை ரசிக்க வைப்ப வேண்டும். பார்வையாளர்கள் இல்லையென்றால், நிச்சயம் நன்றாக இருக்காது.
எனது தொடக்கக் காலத்தில் நானும் வெற்றிக்கு பின்னான கொண்டாட்டத்தை வெளிப்படுத்த கூச்சப்பட்டேன். பின்னர் தொடர்ந்து கொண்டாடியபோது தான் கற்றுக்கொண்டேன். 2003ஆம் ஆண்டுக்கு பின் நான் தொடர்ந்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினேன். நமது மகிழ்ச்சியை அனைவருக்கும் நாம் தான் வெளிப்படுத்த வேண்டும். இந்திய தடகள கூட்டமைப்பு சார்பாக இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம்.
மேலும் ஊக்கமருந்து பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் முழுமையாக களமிறங்கியிருக்கிறோம்'' என்றார்.
இதையும் படிங்க:உணவு டெலிவரி செய்யும் ஒலிம்பிக் சாம்பியன்...!