பாங்காக் : ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர். ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் சுற்றில் இந்திய வீராங்கனை பர்நீத் கவுர் தங்கம் வென்றார். சக இந்திய வீராங்கனை ஜோதி சுரேக்கா வென்னத்தை வீழ்த்தி பர்நீத் கவுர் தங்கப் பதக்கம் வென்றார். 18 வயதான பர்நீத் கவுர் டை பிரேக்கர் முறையில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் சக இந்திய வீராங்கனை ஜோதி சுரேக்கா வென்னத்தை வெற்றி கொண்டார்.
அதேபோல், கம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அதிதி சுவாமி, பிரியான்ஷ் இணை 156க்கு 151 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. ஆடவர் கம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார். தென் கொரியாவின் ஜூ ஜெஹூனை எதிர்கொண்ட அபிஷேக் வர்மா 147க்கு 146 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவி வெண்கலம் வென்றார்.
மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பஜன் கவுர், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரிய வீராங்கனை லிம் ஷியோனிடம் 0க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவி வெளியேறினார். அதேபோல் ரிகர்வு பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.
இதையும் படிங்க : உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி, இறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!