பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022-இன் 6ஆம் நாளான நேற்று (ஆக 3) ஆண்களுக்கான பளு தூக்குதல் 109 கிலோ எடை பிடிவில் லவ்ப்ரீத் சிங் வெண்கலப்பதக்கம் வென்றார். ஜூடோ வீராங்கனை துலிக்கா மான், 78 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும், ஆடவர் பளு தூக்குதல் 109 கிலோ எடை பிரிவில் குர்தீப் சிங் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
தடகளப் பிரிவின் உயரம் தாண்டுதல் போட்டியில் சவ்ரவ் கோஷல் மற்றும் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். இந்த வெற்றியின் மூலம் தடகளப் பிரிவில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளது.
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கோஷல் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
இதையும் படிங்க: CWG 2022: ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கோஷல் வெண்கலம் வென்றார்!