ETV Bharat / sports

’ரோல் பால்’ உலகக் கோப்பையை வென்று இந்திய ஆண்கள் அணி சாதனை!

சென்னை: "ரோல்பால்" விளையாட்டில் இந்திய அணி நான்காவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

India
author img

By

Published : Nov 22, 2019, 7:00 AM IST

இந்தியாவின் ரோல் பால் கூட்டமைப்பு சார்பாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற விளையாட்டான ரோல்பாலின் 5ஆவது உலகக் கோப்பை 2019 போட்டிகள் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தன. இதில், 27 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் அணியினர் பங்கேற்றனர்.

இதன் இறுதிப் போட்டிகள், சென்னை ஐசிஎப் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணியும், கென்யா அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியினர், ஆட்டம் முடிவில் 9-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது.

ரோல் பால் உலககோப்பையை வென்று இந்தியா சாதனை

முன்னதாக, நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - கென்யா அணிகள் விளையாடின. இதில் முதல் பாதியில் முன்னிலையில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி இருந்தது. கடைசி நிமிடத்தில் கென்யா அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

வீரர்கள் தங்களது கால்களில் ஸ்கேடிங் வீல்களை கட்டிக்கொண்டு லாவகமாகவும், உற்சாகமாவும் விளையாடியது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தியர்கள் கண்டுபிடித்து சர்தேச அளவில் புகழ்பெற்ற ரோல் பால் விளையாட்டில் இந்திய அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

இதையும் படிங்க: ரசிகர்களை குழப்பும் முயற்சியில் இறங்கிய சிஎஸ்கே - பதில் கண்டுபிடித்து அசத்திய ரசிகர்கள்!

Intro:ரோல்பால் விளையாட்டில் உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி.Body:ரோல்பால் விளையாட்டில் உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி.

இந்தியாவின் ரோல் பால் கூட்டமைப்பு சார்பாக சர்வதேச அளவில் புகழ்பெற்று விளையாட்டான ரோல்பாலின் 5 வது உலகக் கோப்பை 2019 போட்டிகள் கடந்த 15.11.19 தொடங்கி நடைப்பெற்றது.27 நாட்டை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன, 

இதன் இறுதி போட்டிகள் ஐசிஎப் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்றது.

இதில் இறுதி போட்டியின் ஆண்கள் பிரிவில் இந்திய அணியும், கென்யா அணியும் விளையாடின ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியிர் ஆட்டம் முடிவில் 9-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது.

முன்னதாக நடைப்பெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் கென்யா அணியும் இந்தியா அணியும் விளையாடினர். இதில் முதல் பாதியில் முன்னிலையில் 1-0 என்ற கணக்கில் இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் கென்ய அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக்கோப்பை சாம்பியன் கோப்பை தட்டி சென்றது.

கால்களில் ஸ்கேடிங் வீல்களை கட்டி கொண்டு லாவகமாகவும், ஆக்ரோமாக வீரர்கள் விளையடியது பார்வையளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தியர்கள் கண்டுபிடித்து சர்தேச அளவில் புகழ்பெற்ற இந்திய விளையட்டில் இந்திய அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிட தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.