வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 404, வங்கதேசம் 150 ரன்கள் எடுத்தன.
254 ரன்கள் முன்னிலையில் 2 ஆவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்கள் நஜ்முல், சகீர் ஹசன் இருவரும் இணைந்து 124 ரன்கள் சேர்த்தனர். நஜ்முல் 67 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். சகீர் ஹசன் சதம் அடித்து 100 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
கேப்டன் ஷகிப் அல் ஹசன் கடைசி வரை போராடி 84 ரன்கள் எடுத்தபின் ஆட்டமிழந்தார். நான்காம் நாளான இன்று (டிச. 18) வங்கதேச அணி 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் டிசம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிங்க: 'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு