இதுதொடர்பாக அவர் கூறுகையில்," நான் வெளியில் சொல்ல விருப்பமில்லாத ஒருவருடன் சில தனிப்பட்ட சிக்கல்கள் உள்ளன. அதனால், எனது தற்காப்புக்காக உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துச் செல்கிறேன்.
நான் அதை எப்போதும், என் காரில்தான் வைத்திருக்கிறேன். அது எப்போதும் என் காரில் மட்டும்தான் இருக்கும். அதை நான் யாருக்கும் காட்டவும், அதை வைத்து மற்றவர்களை மிரட்டவும் இல்லை.
இதை தேசிய விளையாட்டு வளாகதத்திற்குள் (என்.ஐ.எஸ்) கொண்டு செல்ல அனுமதிக்கப்படுமா, இல்லையா என்பது குறித்த எந்த வழிகாட்டுதலும் இல்லை. இந்தத் துப்பாக்கியைப் பாட்டியாலாவில் உள்ள என்ஐஎஸ் வளாகத்திற்குள் இருந்த எனது காரில் இருந்தது.
அதை நான் ஒருபோதும் அறைக்கு எடுத்துச் சென்றதில்லை" என்றார். முன்னதாக பாட்டியாலாவில் உள்ள தனிமைப்படுத்துதலின் விதிமுறைகளை மீறியதற்காக, குத்துச்சண்டை வீரர்களான அமித் பங்கல், சதீஷ் குமார், நீரஜ் கோயத் ஆகியோர் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இவர்கள் மீது தற்போது இந்திய விளையாட்டு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.