ETV Bharat / sports

பிரதமரின் உதவியை நாடிய கோல்ஃப் வீரர்! - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் நட்சத்திர கோல்ப் வீரர் ரஷீத் கான், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில் பயிற்சிகளை மேற்கொள்ள நேரம் குறைவாக இருப்பதால், டெல்லி கோல்ஃப் கிளப்பில் பயிற்சியை மேற்கொள்ள அனுமதியளிக்கும்படி மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜூவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

golfer-rashid-khan-writes-to-sports-minister-rijiju-asks-pm-modi-to-help

author img

By

Published : Jun 18, 2020, 3:44 AM IST

தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பால் இந்த ஆண்டு அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட கோல்ஃப் வீரர் ரஷீத் கான், விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ), இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்ஐஐ) ஆகியோருக்கு, டெல்லி கோல்ஃப் கிளப்பில், பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கும்படி கடிதம் எழுதியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிடுமாறும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படியும் சுட்டிக்காட்டியுள்ளார்.’

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ”டெல்லி கோல்ஃப் மைதானத்தில் ஒரு வருட காலமாக உறுப்பினர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள். மேலும் அவர்கள் அனைத்து கோல்ஃப் வீரர்களுக்கும் நுழையத் தடை செய்துள்ளனர். டெல்லி கோல்ஃப் மைதானத்தில் பயிற்சி பெற எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். நாங்கள் ஒரு வருடமாக நீதி கேட்டு, உரிமை கோருகிறோம். தயவுசெய்து இந்த விஷயத்தையும் கவனியுங்கள்.

நான் டெல்லியில் தங்கியிருக்கிறேன். எனக்கு ஒரே நெருங்கிய கோல்ஃப் மைதானம் டெல்லி கோல்ஃப் மைதானம் மட்டுமே. கோவிட்-19 காரணமாக நாங்கள் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஐயா, என்னைப் போன்ற பல கோல்ப் வீரர்கள் எங்கள் விளையாட்டு உரிமைகளுக்காகப் போராடிவருகின்றனர். டெல்லி கோல்ஃப் மைதானம் நிச்சயமாக கோல்ஃப் விளையாட்டை ஊக்குவிப்பதற்கு அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், இப்போது கோல்ஃப் மைதானம் உறுப்பினர்களுக்காக மட்டுமே உள்ளது; வீரர்களுக்காக அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.