ETV Bharat / sports

'கால்பந்தாட்ட கடவுள்' - பீலேவின் சிறந்த கோல்கள்! - free kick goal

'கால்பந்தாட்ட கடவுள்' என அழைக்கப்படும் பீலேவின் சிறந்த கோல்கள் பற்றிய செய்தித் தொகுப்பைக் காணலாம்.

’கால்பந்தாட்ட கடவுள்’ பீலேவின் சிறந்த கோல்கள்

author img

By

Published : Dec 30, 2022, 3:10 PM IST

Updated : Dec 30, 2022, 3:42 PM IST

பீலே, கால்பந்தாட்ட போட்டியில் மிக எளிதாக கோல் அடிக்கும் திறன் கொண்டிருந்தார். மேலும் அசாத்தியமான கோல்களை அடிக்கும் திறனையும் கொண்டிருந்தார். அவர் பிரேசில் கிளப் அணியான சாண்டோஸுக்காக 1,090 கோல்களும், பிரேசில் தேசிய அணிக்காக 95 கோல்களும் அடித்துள்ளார்.

பீலேவின் அனைத்து கோல்களும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவரது எண்ணற்ற சிறந்த கோல்களின் காட்சிகள் இன்னும் ஏராளமாக உள்ளன. பீலே, தனது கால்பந்தாட்ட வரலாற்றில் முழுவதும் பல அற்புதமான கோல்களை அடித்துள்ளார்.

செப். 7, 1956 பீலே தனது இளம் வயதில், அவர் சாண்டோஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். போட்டியின் இரண்டாவது பாதியின் சில நிமிடங்களில் கோல் அடித்தார். கொரிந்தியன்ஸ் ஆஃப் சண்டோஸ் அணிக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் 7-1 என்ற கணக்கில் சாண்டோஸ் வெற்றி பெற உதவினார்.

ஆக. 2, 1959 அன்று ஜுவண்டஸ் ஆஃப் சாவ் போலோ அணிக்கெதிராக, சாவ் போலோ அணிக்காக பீலே விளையாடினார். அப்போட்டியில் பீலேவின் சிறந்த கோல்களில் ஒன்றாக அறியப்பட்ட கோல் பதிவு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் பீலே அடித்த கோலுக்கு எதிரணியான ஜுவண்டஸ், தங்களுக்கு சொந்தமான ஸ்டேடியத்தில் ஒரு சிலை மற்றும் நினைவுப்பலகை வைத்து கௌரவித்தது.

ஜூன் 19ஆம் தேதி 1958ஆம் ஆண்டு தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய பீலே வேல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 66ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

அதற்கடுத்து நடைபெற்ற ஸ்வீடனுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பீலே 55ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். அப்போது பிரேசில் அணி 3-1 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது. பீலே, மொத்தமாக இறுதிப்போட்டியில் 6 கோல்கள் அடித்திருந்தார். பிரேசில் அணி இறுதிப்போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

1970ஆம் ஆண்டு இத்தாலி அணிக்கெதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பீலே, தனது உலகக் கோப்பை இறுதி போட்டியில் கடைசி கோலை அடித்தார். அப்போட்டியில் 4-1 என பிரேசில் அணி வெற்றி பெற்றது.

பீலே சாண்டோஸ் அணிக்காக நவம்பர் 19ஆம் தேதி 1969ஆம் ஆண்டு, வாஸ்கோடகாமாவுக்கு எதிரான போட்டியில் தனது 1000வது கோலை அடித்தார்.

பீலே தனது கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் சாண்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் என இரு அணிக்கும் விளையாடினார். ஆனால், நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக விளையாடிய நேரத்தில் சக்தி வாய்ந்த ’ப்ஃரி கிக்’ கோல் ஒன்றை அடித்தார்.

இதையும் படிங்க: கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மறைவு

Last Updated : Dec 30, 2022, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.