இது குறித்து அவர் கூறுகையில்,
"2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பதக்க பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களை பிடிக்கும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். இந்த லட்சிய இலக்கு நிச்சயம் சாத்தியமாகும். அதற்காக பல இளம் வீரர்களை கண்டறிவதற்கான பணியில் நாங்கள் ஏற்கனவே ஈடுபட்டுள்ளோம். தற்போதைய சூழல் (கரோனா வைரஸ்) சரியான பிறகு அனுபவ வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரைக் கொண்டு அரசாங்கம் ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு குழுவை உருவாக்கும்.
இக்குழு நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு சுற்றித்திரிந்து, திறமையான வீரர்களை கண்டுபடிக்கும். 2028 ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இன்னும் எட்டு ஆண்டுகள் உள்ளதால், எனக்கு இந்தத் திட்டம் மீது நம்பிக்கை உள்ளது. அதனால், இந்தியா நிச்சயம் பதக்க பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: சேவாக்கை விட இம்ரான் நாசிர் திறமையானவர்... ஆனால்? - அக்தர்