இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.ராமச்சந்திரன். இவர் தற்போது தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் தமிழ்நாடு டிரையத்லான் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் உலக டிரையத்லான் கூட்டமைப்பு சார்பில் தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான 33ஆவது காங்கிரஸ் தேர்தல் முதல் முறையாக காணொலி கூடரங்கு மூலம் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த என்.ராமச்சந்திரனுடன் 11 பேர் போட்டியிட்டனர்.
இறுதியாக உலக டிரையலத்லான் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் என்.ராமச்சந்திரனும் ஒருவராக இடம்பெற்றார். இதன் மூலம் இந்தியா சார்பில் உலக டிரையத்லான் தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இணைந்த முதல் நபர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதுகுறித்து பேசிய ராமச்சந்திரன், “உலக டிரையத்லான் தணிக்கைக் குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே எனக்கு கிடைத்த மிகப்பேரும் மரியாதை. மேலும் எனக்கு அதரவளித்த தேசிய டிரையத்லான் கூட்டமைப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். அதேசமயம் உலக டிரையத்லான் தணிக்கைக் குழுவின் அனைத்து பரிவர்த்தனைகளிலும் வெளிப்படைத்தன்மை, நிர்வாகத்தை உறுதி செய்வேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பற்றி எரியும் காரிலிருந்து தப்பிய எஃப் 1 வீரர், நாளை மருத்துவமனையில் இருந்து திரும்புகிறார்