ETV Bharat / sports

ஆசிய ஹாக்கி கோப்பை:நாளை அரையிறுதி... 4 அணியில் இறுதிக்குள் நுழையப்போவது யார்?

சென்னையில் நடந்து வரும் 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகளில் நாளை அரையிறுதிச் சுற்று நடைபெற உள்ளது. இதில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. அதைப் பற்றி விவரிக்கிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு...

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை
author img

By

Published : Aug 10, 2023, 11:02 PM IST

சென்னை: 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 12ஆம் தேதி இறுதிப் போட்டியானது நடைபெறும். சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டுப் போட்டி நடைபெருகிறது.

இந்தப் போட்டி ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியது. நேற்றுடன் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் நாளை அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தின் புதிய அம்சங்கள்: ரூ.16 கோடி செலவில், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை ஆடுகளம், வீரர்கள் பயிற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தினர்கள் அமர்வதற்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் என சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

தரவரிசைப் பட்டியல்: 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையில், இந்தியா, மலேசியா ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. தற்போது நடைபெற்ற 5-லீக் போட்டியில் இந்திய அணி 4 வெற்றி, ஒரு டிராவுடன் 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும், மலேசியா அணி 5 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும்; தென் கொரியா ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும்; அதனைத்தொடர்ந்து ஜப்பான் 1-வெற்றி, 2-தோல்வி,2-டிரா என 5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும்; பாகிஸ்தான் ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுட என 5 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திலும் உள்ளன. மேலும் சீனா ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

நேற்றைய ஆட்டம்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நேற்று போட்டி நடந்தது. அதில் இந்தியாவின் அபார ஆட்டத்தினால், 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது. அரையிறுதியில் இடம்பிடிக்க பாகிஸ்தான் குறைந்தபட்சம் இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இந்தியாவின் அபார ஆட்டத்தினால், நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா தன் ஆதிக்கத்தை செலுத்தியது.

இந்திய ஹாக்கி வீரர்கள்
இந்திய ஹாக்கி வீரர்கள்

அரை இறுதி: ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராஃபி லீக் சுற்று முடிவுக்குப் பிறகு இந்தியா, ஜப்பான் மலேசியா மற்றும் நடப்பு சாம்பியன் தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. இதில், முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான தென்கொரியாவை மலேசியா அணி மோதுகிறது. அதேபோல், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் (நாளை) ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தியா-ஜப்பான் லீக் ஆட்டம்: இதற்கு முன்னதாக நடைபெற்ற லீக் சுற்றில், இந்திய-ஜப்பான் அணி தொடக்க நிமிடங்களில் இந்திய அணிக்கு 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றை இந்திய அணி வீரர்கள் கோல்களாக மாற்றத் தவறினர். 7-வது நிமிடத்தில் அமித்ரோஹிதாஸின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

அடுத்த நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த அணியும் வாய்ப்பை வீணடித்தது. ஆட்ட முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. அன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதியில் இந்திய அணிக்கு 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. மாறாக ஜப்பான் அணிக்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் தான் கிடைத்தன. அதில் ஒன்றை அந்த அணி கோலாக மாற்றியது.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி, பெனால்டி கார்னர் வாய்ப்புகள் சரியாக இம்முறை பயன்படுத்தினால், ஆட்டம் சற்று விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளை நடைபெறும் இரண்டு அரை இறுதி போட்டியில், தோல்வி அடையும் இரண்டு அணியும் 12-ஆம் தேதி 3 மற்றும் 4-ஆம் இடங்களுக்காக மோதும்.

அதேபோல் வெற்றியடையும் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டியில், ஆகஸ்ட் 12ஆம் தேதி, இரவு 8.30 மணிக்கு நடைபெறும். மேலும், மலேசியா, கொரியா அணி - நேற்று மோதிய நிலையில், மலேசியா அணி வெற்றி பெற்றுள்ளது. மலேசியா அணி தன் சிறப்பான ஆட்டத்தால், இரண்டாம் இடத்தில் நிலைத்து வருகிறது. நடப்பாண்டு சாம்பியனான கொரியா, 3-ஆவது இடத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை:இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் தேதி மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.