ETV Bharat / sports

#PKL2019: சொந்த மண்ணில் வெற்றியை சுவைத்த தபாங் டெல்லி!

author img

By

Published : Aug 26, 2019, 4:31 PM IST

டெல்லி: புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தபாங் டெல்லி அணி 36-27 என்ற கணக்கில் யூ.பி. யோதா அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியளில் முதலிடம் பிடித்தது.

dabang dheli

புரோ கபடி 2019 தொடரின் லீக் போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 59-ஆவது லீக் போட்டியில் தபாங் டெல்லி, யூ.பி. யோதா அணியும் மோதின.

ஆரம்பத்தில் அதிரடி காட்டிய யூ.பி. யோதா அணி, முதல் இரண்டு நிமிடங்களுக்குள்ளாகவே 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின் ஆட்டத்தின் 3ஆவது நிமிடத்தில் தனது முதல் புள்ளியைப் பெற்ற டெல்லி அணி அதிரடியில் இறங்கியது.

இதன்மூலம் முதல் பாதி முடிவில் தபாங் டெல்லி அணி 15-11 என்ற கணக்கில் யூ.பி. யோதா அணியை விட முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இன்னும் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய டெல்லி அணி வீரர்கள், எதிரணியின் டிஃபென்ஸை சிதறடித்து புள்ளிகளை சேர்த்த வண்ணம் இருந்தனர்.

இறுதியில் 36-27 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அணி, யூ.பி. யோதா அணியை வீழ்த்தியது. தபாங் டெல்லி அணியின் ரைடர் நவீன் குமார் 16 புள்ளிகளைப் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த வெற்றியின் மூலம் புரோ கபடி லீக்கின் புள்ளி பட்டியளில் 39 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது தபாங் டெல்லி அணி. 22 புள்ளிகளுடன் யூ.பி. யோதா அணி புள்ளிப் பட்டியளில் 10-ஆவது இடத்தில் உள்ளது.

Intro:Body:

Pro Kabadi 2019 Match 2

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.