ETV Bharat / sports

ஆசிய வில்வித்தை: தங்கம் வென்ற தீபிகா குமாரி!

author img

By

Published : Nov 28, 2019, 6:00 PM IST

பாங்காக்கில் நடைபெற்றுவரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கப் பதக்கம் வென்றார்.

Deepika kumari
Deepika kumari

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், டோக்கியோவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, சக நாட்டைச் சேர்ந்த அன்கிதா பகத்துடன் மோதினார்.

இப்போட்டியில் இலக்குகளை துல்லியமாக எய்த தீபிகா குமாரி 6-0 என்ற கணக்கில் அன்கிதா பகத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அதேசமயம், இப்போட்டியில் தோல்வியடைந்த அன்கிதா பகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்திய வில்வித்தை சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்டதால் இவ்விரு வீராங்கனைகளும் நடுநிலை தடகள வீராங்கனைகளாகவே (Nuetral athelete) போட்டியில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய ஜோடி!

முன்னதாக இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தீபிகா குமாரி, அன்கிதா பகத் ஆகியோர் முன்னேறியதன் மூலம், டோக்கியோவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தீபிகா குமாரி வியட்நாமின் (Do Thi Anh) டூ தீ அன்-னை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அன்கிதா பகத், பூடானைச் சேர்ந்த கர்மாவை 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தார்.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் மூலம் இந்திய வீரர்களான அடானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர்.

இதையும் படிங்க: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவுகளிலும் வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.