பர்மிங்ஹாம்: 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இத்தொடரின், ஆறாவது நாளான இன்று (ஆக. 3) பளு தூக்குதல் ஆடவர் 109 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர் லவ்பிரீத் சிங் பங்கேற்ற நிலையில், அவர் ஸ்னாட்சி பிரிவில் 163 கிலோவையும், கிளீன் & ஜெர்க் பிரிவில் 192 கிலோவையும், மொத்தம் 355 கிலோ பளுவை தூக்கினார். இதன்மூலம், மூன்றாம் இடம் பிடித்த லவ்பிரீத் வெண்கலம் வென்றார்.
கேம்ரூன் நாட்டைச்சேர்ந்த ஜூனியர் பெரிக்லெக்ஸ் நகாட்ஜா நியாபேயு 361 கிலோவுடன் தங்கத்தையும், சமோவா நாட்டைச் சேர்ந்த ஜாக் ஹிட்டிலா ஓப்லோஜ் 358 கிலோவுடன் வெள்ளியையும் வென்றனர்.
இதுவரை, இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்கள் என 6ஆவது இடத்தில் நீடிக்கிறது. இதில், பளு தூக்குதலில் மட்டும் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களைக்குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
LOVEPREET WINS BR🥉NZE !!
— SAI Media (@Media_SAI) August 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The weightlifting contingent is giving us major MEDAL moments at #CommonwealthGames2022🤩
Lovepreet Singh bags Bronze🥉 in the Men's 109 Kg category with a Total lift of 355 Kg
Snatch- 163Kg NR
Clean & Jerk- 192Kg NR
Total - 355kg (NR) pic.twitter.com/HpIlYSQxBZ
">LOVEPREET WINS BR🥉NZE !!
— SAI Media (@Media_SAI) August 3, 2022
The weightlifting contingent is giving us major MEDAL moments at #CommonwealthGames2022🤩
Lovepreet Singh bags Bronze🥉 in the Men's 109 Kg category with a Total lift of 355 Kg
Snatch- 163Kg NR
Clean & Jerk- 192Kg NR
Total - 355kg (NR) pic.twitter.com/HpIlYSQxBZLOVEPREET WINS BR🥉NZE !!
— SAI Media (@Media_SAI) August 3, 2022
The weightlifting contingent is giving us major MEDAL moments at #CommonwealthGames2022🤩
Lovepreet Singh bags Bronze🥉 in the Men's 109 Kg category with a Total lift of 355 Kg
Snatch- 163Kg NR
Clean & Jerk- 192Kg NR
Total - 355kg (NR) pic.twitter.com/HpIlYSQxBZ
இதையும் படிங்க: Exclusive from Birmingham: "சொல்ல வார்த்தையே இல்லை" - தங்கம் வென்ற பின் தமிழ்நாடு வீரர் உவகை!