ETV Bharat / sports

காமன்வெல்த் 2022: அவினாஷ் வெள்ளி வென்றார்... மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா அசத்தல்..

author img

By

Published : Aug 6, 2022, 5:44 PM IST

காமன்வெல்த் தொடரின் 3,000 மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் வெள்ளி வென்றார். இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்களை குவித்துள்ளது.

காமன்வெல்த் 2022
காமன்வெல்த் 2022

பர்மிஹ்காம்: 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அவினாஷ் முகுந்த் சேபிள் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இவர் 8 நிமிடம் 11.20 வினாடிகளில் இலக்கை கடந்து இந்தியாவுக்கு 10ஆவது வெள்ளியை பெற்றுக்கொடுத்துள்ளார். காமன்வெல்த் 2022 தொடரில், தடகள போட்டிகளில் இந்தியா பெரும் நான்காவது பதக்கம் இது.

முன்னதாக, 10,000 மீ. நடை ஒட்டப்பந்தயத்தின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்றார். அதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை பாவ்னா ஜாட் கடைசி இடத்தை பிடித்தார்.

இதனிடையே மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதி வருகின்றன. இதல் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். தற்போது இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.

மேலும், அவினாஷ் வெள்ளி வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 9 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலத்துடன் 5ஆவது இடத்தில் நீடிக்கிறது.

இதையும் படிங்க: நடை ஒட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றார் பிரியங்கா கோஸ்வாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.