இந்தியாவில் வேகமாக பரவிவரும் கோவிட்-19 வைரஸ் காரணமாக இதுவரை 1,024 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இந்தியர்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குமாறு மோடி கேட்டுகொண்டார். இதையடுத்து, பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த தொகையை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில், தெலங்கானாவைச் சேர்ந்த 15 வயது இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஈஷா சிங் தனது சேமிப்பு தொகையிலிருந்து 30 ஆயிரம் ரூபாயை பிரமதரின் நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம், கரோனா எதிர்ப்புக்கு நன்கொடை வழங்கிய இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் ஒரு லட்ச ரூபாயும், வீரர் ரஹானே ரூ.10 லட்ச ரூபாயும் நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிட் -19 வைரஸ்: கர்நாடக கிரிக்கெட் சங்கம் ரூ. 1 கோடி நன்கொடை