கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் ஆறரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இப்பெறுந்தொற்றின் அபாயம் காரணமாக ஒலிம்பிக் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய தடகளக் கூட்டமைப்பானது(ஏஎஃப்ஐ), இந்தியாவின் சீனியர் தடகள வீரர்களுக்கான புதிய அட்டவணையை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏஎஃப்ஐயின் தலைவர் அடில் ஜே சுமரிவல்லா கூறுகையில், “தற்போது நிலவும் சூழல் காரணமாகவும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், இந்தாண்டிற்கான அனைத்து உள் நாட்டு அட்டவணையையும் மாற்றவுள்ளோம்.
குறிப்பாக சீனியர் வீரர்களுக்கான அட்டவணையைப் புதுப்பிக்கவுள்ளோம். அதேபோல் பயிற்சியாளர்களின் பயிற்சி திட்டங்களையும் மறுசீரமைப்பு செய்யும் படி கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக ஏ.எஃப்.ஐ இந்தாண்டு மார்ச் மாதத்தில், இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ்(ஐ.ஜி.பி) தொடரை நடத்துவதாக இருந்தது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக அத்தொடர் ஒத்திவைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விளையாட்டு மீண்டும் நம்மை ஒருங்கிணைக்கும் - ஒசாகா நம்பிக்கை