கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி உலக அளவில் தாய்லாந்தில் நடைபெற்ற வாள் சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் ஜெயக்குமார் என்பவரின் மகள் ஜெமிலியா, இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான வாள்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மாணவி ஜெமிலியாவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் பாராட்டை தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நம்ம டீமுக்கு நெ.4 பேட்ஸ்மேன் தேவை இல்ல' பிசிசிஐயை கலாய்த்த யுவராஜ் சிங்!