சென்னை: 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பாக ஆறு அணிகள் பங்கேற்கின்றன. பொது பிரிவில் மூன்று அணிகளும், மகளிர் பிரிவில் மூன்று அணிகளும் என மொத்தம் 30 பேர் களமிறங்கியுள்ளனர்.
நேற்றைய தினம் (ஆக. 1) நான்காவது சுற்று போட்டி நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளும் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்தியா சார்பாக ஆறு அணிகளுக்கும் தலா 4 பேர் என 24 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். கடந்த மூன்று மூன்று சுற்றுகளில் இந்திய அணி, வெகு சிறப்பாக விளையாடியது. குறிப்பாக, பொதுப்பிரிவில் உள்ள 'பி' அணி புள்ளி பட்டியலில் முதல் இடம்பெற்று இருந்தது.
நேற்றைய 4ஆவது சுற்றில் கலந்து கொண்டு விளையாடிய அணிகளின் நிலையை பின்வருமாறு காண்போம்.
இந்தியா பொது பிரிவு (குறிப்பிடப்பட்டுள்ள காய்களின் நிறங்கள் இந்திய வீரர்கள் விளையாடியது)
இந்திய பொது அணி A vs பிரான்ஸ்: இந்தியா அணியும் பிரான்ஸ் அணியும் 2-2 புள்ளி பெற்று சமன் செய்தன.
- ஹரிகிருஷ்ணா - ஜூலஸ் மோசர்ட் - கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 52 நகர்த்தலில் சமன் செய்தார்
- விதித் குஜராத்தி - லாரண்ட் பிரேசினெட் - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 31 நகர்த்தலில் சமன் செய்தார்
- அர்ஜூன் எரிகைசி - மேத்யூ கார்னெட் - கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 24 நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார்
- ஶ்ரீநாத் நாராயணன் - மேக்சிம் லகர்ட் - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 51 நகர்த்தலில் சமன் செய்தார்
இந்திய ஓபன் அணி B vs இத்தாலி: இத்தாலி அணியை, இந்திய அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
- குகேஷ் - டேனிலே வோகடுரோ - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 34ஆவது நகர்த்தலில் வெற்றி
- சரின் நிஹில் - லூகா ஜூனியர் மொரோனி - கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 51ஆவது நகர்த்தகில் வெற்றி
- பிரக்ஞானந்தா - லோரன்சோ லோடிசி - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 42ஆவது நகர்த்தலில் சமன் செய்தார்
- சத்வாணி - பிரான்சஸ்கோ சோனிஸ் - கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 30ஆவது நகர்த்தலில் சமன் செய்தார்
இந்திய ஓபன் அணி C vs ஸ்பெயின்: இந்திய அணி, ஸ்பெயின் அணியிடம் 1.5 - 2.5 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது.
- கங்குலி - அலெக்ஸ்சல் சிரோவ் - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 37ஆவது நகர்த்தலில் சமன் செய்தார்
- சேதுராமன் - பிரான்சிஸ்கோ - கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 31ஆவது நகர்த்தலில் சமன் செய்தார்
- குப்தா அபிஜித் - டேவிட் ஆன்டன் குஜாரோ - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 41ஆவது நகர்த்தலில் தோல்வி
- கார்த்திகேயன் முரளி - ஜெய்மி சந்தோஷ் லடாசா - கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 52ஆவது நகர்த்தலில் சமன் செய்தார்
-
Only five teams won all four matches in the Open section of the Chess Olympiad: India B, Armenia, Israel, England, and Spain.
— International Chess Federation (@FIDE_chess) August 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
It's Spain v India B, England v Armenia, and Israel v USA in Round 5 tomorrow. #ChessOlympiad pic.twitter.com/6zNAnuyFZX
">Only five teams won all four matches in the Open section of the Chess Olympiad: India B, Armenia, Israel, England, and Spain.
— International Chess Federation (@FIDE_chess) August 1, 2022
It's Spain v India B, England v Armenia, and Israel v USA in Round 5 tomorrow. #ChessOlympiad pic.twitter.com/6zNAnuyFZXOnly five teams won all four matches in the Open section of the Chess Olympiad: India B, Armenia, Israel, England, and Spain.
— International Chess Federation (@FIDE_chess) August 1, 2022
It's Spain v India B, England v Armenia, and Israel v USA in Round 5 tomorrow. #ChessOlympiad pic.twitter.com/6zNAnuyFZX
-
இந்திய மகளிர் பிரிவு (குறிப்பிடப்பட்டுள்ள காய்களின் நிறங்கள் இந்திய வீராங்கனைகள் விளையாடியது)
இந்திய மகளிர் அணி A vs ஹங்கேரி: இந்திய அணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹங்கேரி அணியை 2.5 - 1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
- கொனெரு ஹம்பி - தான் ட்ராங் ஹோங் - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 48ஆவது நகர்த்தலில் சமன் செய்தார்
- ஹரிகா துரோனவல்லி - டிசியா காரா - கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 13ஆவது நகர்த்தலில் சமன் செய்தார்
- வைஷாலி - சிடோனியா - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 35ஆவது நகர்த்தலில் சமன் செய்தார்
- தனியா சச்தேவ் - சோகா கால் - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி - போட்டி நடைபெற்று வருகிறது
இந்திய மகளிர் அணி B vs எஸ்டோனியா: இந்திய அணி, எஸ்டோனியா அணியை விட 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
- வந்திகா அகர்வால் - மெய் நார்வா - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 43ஆவது நகர்த்தலில் வெற்றி
- பத்மினி ராவுட் - மர்கரேத் ஓல்டே- கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 45ஆவது நகர்த்தலில் சமன் செய்தார்
- சௌமியா சாமிநாதன் - அனஸ்டாசியா சிணிட்சினா - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 43ஆவது நகர்த்தலில் சமன் செய்தார்
- திவ்யா தேஷ்முக் - சோபியா பொல்கென் - கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 42ஆவது நகர்த்தலில் சமன் செய்தார்
இந்திய மகளிர் அணி C vs ஜார்ஜியா: இந்திய அணி ஜார்ஜியா அணியிடம் 3-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வி தழுவியது.
- கர்வதே ஈஷா - நானா - கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 34ஆவது நகர்த்தலில் தோல்வி
- நந்திதா - நினோ - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 42ஆவது நகர்த்தலில் வெற்றி
- ஷாஹிதி வர்ஷினி - லேலா - கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 12ஆவது நகர்த்தலில் தோல்வி
- பிரத்யுஷா போடா - சலோம் - வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 36ஆவது நகர்த்தலில் தோல்வி
இதையும் படிங்க: ஜூடோவில் இந்தியாவுக்கு 2 பதக்கம்; பளு தூக்கும் போட்டியிலும் பதக்கம்