அஜர்பைஜான்: அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா - நார்வேயின் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் மோதும் இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்று தொடங்கி நடைபெற்றது.
இன்று கருப்பு நிறக் காய்கள் உடன் ஆட்டத்தை தொடங்கிய பிரக்ஞானந்தா வெற்றியை உறுதி செய்வாரா என இந்திய மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வெள்ளை நிறக் காய்கள் உடன் பிரக்ஞானந்தா உடன் மோதி டிரா செய்தார். இதனால் நாளை டைபிரேக்கர் முறையில் போட்டி நடைபெறும்.
நாளை நடைபெறும் ஆட்டத்தின் முடிவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் செல்வது யார் என்பது தெரிய வரும். முன்னதாக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதலாவது சுற்றில் 35-ஆவது நகர்வில் ஆட்டம் டிராவில் முடிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மேக்னஸ் கார்ல்சன் ஒரு பக்கம் இருந்தாலும், கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய வீரராக பிரக்ஞானந்தா இருந்து வருகிறார். அதிலும், இறுதிப் போட்டியில் உலகின் செஸ் தரவரிசையில் நம்பர் 1 ரேங்கிங் கார்ல்சன் உடன் பிரக்ஞானந்தா மோதுகிறார் என்பதும் ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்து உள்ளது.
-
Magnus Carlsen takes a quiet draw with white against Praggnanandhaa and sends the final to tiebreaks. The winner of the #FIDEWorldCup will be decided tomorrow!
— International Chess Federation (@FIDE_chess) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
📷 Maria Emelianova pic.twitter.com/aJw1vvoFnK
">Magnus Carlsen takes a quiet draw with white against Praggnanandhaa and sends the final to tiebreaks. The winner of the #FIDEWorldCup will be decided tomorrow!
— International Chess Federation (@FIDE_chess) August 23, 2023
📷 Maria Emelianova pic.twitter.com/aJw1vvoFnKMagnus Carlsen takes a quiet draw with white against Praggnanandhaa and sends the final to tiebreaks. The winner of the #FIDEWorldCup will be decided tomorrow!
— International Chess Federation (@FIDE_chess) August 23, 2023
📷 Maria Emelianova pic.twitter.com/aJw1vvoFnK
முன்னதாக, டை பிரேக்கரில் 3.5 - 2.5 என்ற கணக்கின் முன்னிலையில் பிரக்ஞானந்தா உலகின் 2ஆம் நிலை வீரரான ஃபேபியானோவை நேற்றைய முன்தினம் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். முன்னதாக, இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருந்தார்.
ஆனால், பிரக்ஞானந்தா தற்போது இறுதிப் போட்டியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கு கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். மேலும், இதற்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அது மட்டுமல்லாமல், ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் காரி காஸ்போராவ் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் பிரக்னானந்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகமே உற்று நோக்கும் உலக செஸ் கோப்பை: இறுதி யுத்தத்தில் வென்று சாம்பியன் ஆவாரா பிரக்ஞானந்தா?