கஜகஸ்தான் நாட்டில் பிரசிடென்ட்ஸ் கோப்பை குத்துச்சண்டை தொடர் நடைபெற்றது. இதில், ஆடவர் 63 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீரர் சிவ தபா, கஜகஸ்தானின் சகிர் சைஃபுலினுடன் மோதவிருந்தார். முன்னதாக, ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் சிவ தபா, சைஃபுலினிடம் தோல்வி அடைந்தார். இதனால், இன்றையப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்த நிலையில், காயம் காரணமாக சைஃபுலின் போட்டியில் பங்கேற்கவில்லை என அறிவித்தார்.
இதனால், சிவ தபா எந்தவித போட்டியும் இல்லாமல் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம், இந்தத் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்